யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தரான பவித்திரன் என்பவர் கடத்தப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் – கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
38 வயது நபரான இவர் வட்டுக்கோட்டையை சேர்ந்தவராவார். மற்றைய இரு சந்தேக நபர்களும்
கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவரும் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.
முன்னதாக இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.