நாட்டில் கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் வேலையில்லா பிரச்சினை 4.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருளாதாரம் விரிவடைவதற்கு முன்னர் 4.7 சதவீதமாக வேலையில்லாப் பிரச்சினை காணப்பட்டது.
இது மூன்றாம் காலாண்டு வளர்ச்சியை விட மூன்று மடங்கு அதிகமாகும். சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் காணப்பட்ட அந்நிய செலாவணி தட்டுப்பாட்டிலிருந்து நாடு மீண்டு வருவம் நிலையில், கடந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் 1.6 சதவீதமாக இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் 4.5 சதவீதமாக விரிவடைந்துள்ளது.