இலங்கையில் சுகாதார சேவையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பரந்த கலந்துரையாடல் ஒன்றை நடத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நவீன மருத்துவ சேவைகளுக்கு இணையான புதிய தொழில்நுட்பத்திற்கு அமைவாக இலங்கையில் சுகாதார சேவை அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.