இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய , இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மா பொதி ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.