மைத்திரியிடம் நாளை விசாரணை!

editor 2

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெறவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இது தொடர்பான வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தாம் தெரிவித்த கருத்து குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

Share This Article