தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் வவுனியா
நகரசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக கோவிந்தன் கருணாகரம்(ஜனா), தேசிய அமைப்பாளராக பிரசன்னா இந்திரகுமார், நிதிச் செயலாளராக சுரேன் குருசாமி, நிர்வாகச் செயலாளராக விந்தன் கனகரத்தினம், இளைஞரணி செயலாளராக செந்தில் நாதன் மயூரன் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
இதேவேளை ரெலோவின் 11 ஆவது தேசிய மாநாடு இன்று காலை வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது