உயிருக்கு உத்தரவாதம் தந்தால் தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து அறிவிப்பேன் என்கிறார் மைத்திரி!

உயிருக்கு உத்தரவாதம் தந்தால் தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து அறிவிப்பேன் என்கிறார் மைத்திரி!

editor 2

‘எனக்கு உயிர் அச்சுறுத்தல் உண்டு. என் உயிருக்கு உத்தர வாதம் தந்தால் உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலுக்குக் காரணமானவர்கள் குறித்து அறிவிப்பேன்.’ – இவ்வாறு நேற்று மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்குத் தகவல்களை வெளியிடத்தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் நேற்று முன் தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந் தார்.

அத்தோடு, இது தொடர்பில் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தாலோ அல்லது உத்தரவு பிறப்பித்தாலோ அது தொடர் பான தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன் பின்னணியிலேயே, தனக்கும் தன் குடும்பத்துக்கும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தமக்கு பாதுகாப்பு வழங்கும் பட்சத்தில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் உண் மைகளை வெளியிடுவேன் எனவும் நேற்று அவர் மீண்டும் கூறியுள்ளார

Share This Article