நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்காமல் தெரிந்த உண்மையை மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்தவேண்டும். உண்மையை மறைப்பதும் ஒரு வகையில் குற்றமாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து பாரதூரமானது. குண்டுத்தாக்குதல் தொடர்பில் அவருக்கு ஏதும் தெரிந்திருந்தால் அதனை அவர் பகிரங்கப்படுத்தவேண்டும்.
நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவ சியமில்லை. உண்மை தெரிந்திருந்தும் அதனை மறைப்பதும் குற்றமாக கருதப்படும் – என்றார்.