இந்திய துணைத் தூதரகத்துக்கு அண்மையாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை தடுக்க வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் அண்மையாக – புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம் அருகே தீவகத்தைச் சேர்ந்த மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பித்த இந்தப் போராட்டம் நேற்று
மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.
இரவு – பகலாக தொடரும் இந்தப் போராட்டத்தில் செல்லத்துரை நற்குணம், அன்ரன் செபராசா, சின்னத்தம்பி சண்முகராஜா, அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் ஆகிய நான்கு மீனவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒருவரே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.