வெடுக்குநாறி மலையில் கோயில்கள் எதுவும் கிடையாது. வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயல்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் – இப்படி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.
அத்துடன், வெடுக்குநாறிமலையை தொல்பொருள் திணைக்களம் அநுராத புர யுகத்துக்கு சொந்தமானது என்று அடையாளப்படுத்தியுள்ளது.
2023இல் சட்டவிரோதமாக அங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ததாலேயே பிரச்னைகள் தோற்றம் பெற்றன என்றும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, இந்த விவாதத்தில் வெடுக்குநாறி மலை பற்றி பேசப்பட்டது.
கோயிலுக்கு சென்றவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. வெடுக்கு நாறி மலையில் எந்த கோயில்களும் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறேன்.
இந்த மலையை தொல்பொருள் திணைக்களம் அநுராதபுர யுகத்துக்கு சொந்தமான தொல்பொருள் மரபுரிமைகள் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தி யுள்ளது.
பௌத்த மத மரபுரிமைகள் உள்ள பகுதியில் பிறிதொரு தரப்பினர் தமது மத வழிபாடுகளை முன்னெடுக்கும்போது முரண்பாடுகளே தோற்றம் பெறும்.
2023 ஆம் ஆண்டு இந்த மலையில் சட்டவிரோதமான முறையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததும் பிரச்னை கள் தோற்றம் பெற்றன.
கடந்த மார்ச் 04 ஆம் திகதி மதிமுகராசா என்ற பூசகர் வெடுக்குநாறி மலையில் பூஜை வழி பாட்டில் கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான செயல்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
சட்டவிரோதமான முறையில் எவர் செயல்பட்டாலும் கைதுகள் நடை பெறும்.
இந்து கோயில்களுக்கு சென்று பிற மதத்தவர்கள் முறையற்ற வகையில் செயல்பட்டால் அவர்களையும் நாங்கள் கைது செய்வோம்.
ஆகவே வடக்கு, கிழக்கு மாகாண வாக்குகளை எதிர்பார்த்து ஒருதலைபட்சமாக கருத்து தெரிவிப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் – என்றார