முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் பொதுத் தேர்தலையே நடத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன் தினம் நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள்
குறிப்பிடுகின்றன.
குறித்த சந்திப்பின்போது கட்சியின் உயர்மட்டக் குழுவினர், பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்ட போதிலும் அரசியலமைப் பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க, கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.