ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என்று சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுநர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் எனினும், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக பாராளுமன்றத்
தேர்தலை நடத்த வேண்டும். முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் அதில் வெற்றி பெறுபவரின் கட்சி ஒரு வாக்கையேனும் கூடுதலாக பெற்றுவிடும்.
3இல் 2 பெரும்பான் மையை வழங்குவது ஏற்புடையதா என்பதை மக்கள் பரிசீலிக்க வேண்டும்.
இதனால்தான், அனைத்து கட்சிகளுக்கும் பாராளுமன்ற அங்கத்துவம் கிடைக்கவேண்டும் என்றே
விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத் தப்பட்டது.
ஆனால், இதன் நிலைமை தற்போது உங்களுக்கு தெரியும்.
இதேநேரம், தற்போதைய அரசாங்கம் பொதுஜன பெரமுனவின்அரசாங்கமா என்பது சந்தேகமே. பொதுஜன பெரமுன கட்சியின்உறுப்பினர்கள் அமைச்சர்களாக உள்ளனர். ஆனால், அவர்களில் பலர் பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைப் பணிமனைக்கு வருவதில்லை.
பெரமுனவே அதிக ஆசனங்களை கொண்டுள்ளது. ஆனால், பலர் இன்று அமைச்சர்கள் இல்லை. வடக்கில் எமது கட்சிக்கு உறுப்பினரகள் இல்லை – கிழக்கில் எமது கட்சிக்கு அமைச்சுகள்
இல்லை. எமது கூட்டணியில் இருந்தகட்சிகளே இப்போது அரசாங்கத்தில் உள்ளன – என்று அவர் நேற்று கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டார்.