தலைமன்னார் சிறுமி கொலை; சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு!

தலைமன்னார் சிறுமி கொலை; சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு!

editor 2

மன்னார் மாவட்டம் தலைமன்னாரில் 10 வயது சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநரை மீளவும் விளக்கமறியலில்
வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று வியாழக்கிழமை மன்னார் நீதிவான் நீதிமன்ற நீதிவான்
கே. எல். எம். சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சான்றுப் பொருட்களின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்காகவும் சிறுமியின் மரண விசாரணை முடிவை பெற்றுக்கொள்வதற்காகவும் இந்த வழக்கு எதிர்வரும் 28
ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின்
விளக்கமறியலும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் – ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி மாலை காணாமல்போன 10
வயதான சிறுமி மறுநாள் அந்தப் பகுதியிலுள்ள தென்னந்தோப்பிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This Article