முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாகவே ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை வியாழக்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது மாங்குளம் வீதி ஊடாக ஒட்டிசுட்டான் நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை மறித்தபோது அது நிக்காமல் பயணித்துள்ளது. புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை கற்சிலைமடு பகுதியில் வைத்து துப்பாக்கியால் சில்லுக்கு சுட்டு பிடித்துள்ளார்கள்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகிறனர்.
எனினும் குறித்த நடவடிக்கையில் பொலிஸார், விஷேட அதிரடி படையினர் ஆகியோர் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் எதுவிதமான சந்தேகத்திற்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.