தற்போதைய வெப்பநிலையால் சிறார்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம!

தற்போதைய வெப்பநிலையால் சிறார்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம!

editor 2

தற்போதைய வறட்சியான காலநிலை மற்றும் கடுமையான வெயில் காரணமாக சிறுவர்களுக்கு பல்வேறு பக்க விளைவுகள் மற்றும் நோய் நிலைமைகள் ஏற்படுவதாக வைத்திய நிபுணர் கலாநிதி சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா, மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளைய தினம் வெப்பநிலை நிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடைய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்திலிருந்து அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.

குறித்த மாவட்டத்தில் 37.1 பாகை செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியிருந்தது.

Share This Article