தமது காணிகளை கையளிக்கக்கோரி கேப்பாப்பிலவு மக்கள் மனுக் கையளிப்பு!

தமது காணிகளை கையளிக்கக்கோரி கேப்பாப்பிலவு மக்கள் மனுக் கையளிப்பு!

editor 2

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு கையளித்துள்ளனர். 

இன்று காலை மாவட்ட செயலகத்துக்குச் சென்ற கேப்பாப்பிலவு மக்கள் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி, அரசாங்க அதிபருக்கான மனுவை கையளித்துள்ளனர்.

பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் இதன்போது தெரிவித்துள்ளனர். 

கேப்பாப்பிலவு மக்களின் ஒரு பகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, வைத்தியசாலை, தேவாலயம் உள்ளிட்ட முக்கிய மக்களின் குடியிருப்புக்கள் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article