மக்கள் விடுதலை முன்னணியின் பணிமனையில் இலங்கைக்கான கியூபத் தூதுவர் அண்ட்
ரெஸ் மார்செலோ காரிடோ தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க
நேற்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் கியூபத்தூதுவர் அலுவலகத்தின் பிரதான செயலாளர் மாரிபெல்
டூரட் கொன்சலஸூம் தேசியமக்கள் சக்தியின் தேசிய நிறை வேற்றுப் பேரவை உறுப்பினர்
பிமல் ரத்நாயக்கவும் கலந்துகொண்டனர்.
இதன்போது நீண்டகாலமாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை
முன்னணிக்கும் இடையில் இருந்த அரசியல் தொடர்புகள் பற்றியும் நிகழ்காலத்தில் தேசிய
மக்கள் சக்தியின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும் விலா வரியாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட காலத்துக்கு முன்பாக கியூபா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை
பற்றியும் இன்றளவில் கியூபாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள நேரடி தொடர்புகள்
மற்றும் அவற்றின் முன்னேற்றம், பிரச்னைக்குரிய பகுதிகள் பற்றியும் கியூபத் தூதுவர் அநுர
குமார திஸநாயக்கவிடம் தெளிவுபடுத்தினார்.