ஜனாதிபதி ரணில் – பசில், மஹிந்த சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் - பசில், மஹிந்த சந்திப்பு!

editor 2

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை இரவு கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது.

பசில் ராஜபக்க்ஷ அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர் ஜனாதிபதியை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும். இந்தச் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவும் கலந்து கொண்டார்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் மேலதிக கலந்துரையாடல்களுக்கு இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share This Article