யார் என்றாலும் எமது கட்சியின் ஆதரவுடன் தான் ஜனாதிபதியாகலாம் – நாடு திரும்பிய பஷில்!

யார் என்றாலும் எமது கட்சியின் ஆதரவுடன் தான் ஜனாதிபதியாகலாம் - நாடு திரும்பிய பஷில்!

editor 2

இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க வேண்டும். எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் நடந்தாலும் நான் அதற்குரிய ஏற்பாடுகளை செய்வேன். எவர் ஜனாதிபதியாக இருந்தாலும் எமது கட்சியின்
ஆதரவுடன்தான் வரமுடியும் – இவ்வாறு கூறியுள்ளார் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷ.

பாராளுமன்றத்துக்கு மீண்டும் செல்லும எண்ணம் எனக்கு இல்லை. எந்த தேர்தல் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளேன். தேவையான இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

எமது கட்சி மக்களை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. மக்கள் சொல்வதைச் செய்கிறோம். சில இடங்களில் தவறுகள் ஏற்படுகின்றன. நாம் கூறுவதை மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. சில சந்தர்ப்பங்களில் மக்கள் சொல்வதையும் நாம் ஏற்கவில்லை. அவற்றை திருத்திக்
கொண்டு பயணிக்க விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Share This Article