துண்டிக்கப்பட்ட மின் இணைப்பைமீள வழங்குவதற்கான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தூண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீளப்பெறுவதற்காக முன்னர் 3 ஆயிரம் ரூபாய் அறவிடப்பட்டது.
இது 800 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், மின் இணைப்பு சீரமைப்பின்போது செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமார சிங்க தெரிவித்தார்.