தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனுக்கு வடமராட்சி தீருவிலில் திரண்ட பல நூற்றுக்கணக்கான மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை வவுனியாவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் எடுத்துவரப்பட்ட சாந்தனின் புகழுடலுக்கு வவுனியாவில், மாங்குளத்தில், கிளிநொச்சியில், கொடிகாமத்தில் என பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
பெருந்திரளமான மக்கள் திரண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பிற்பகலில் தீருவிலுக்கு புகழுடல் எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு திரண்ட மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மக்கள் என பலநூற்றுக்கணக்கானோர் பங்குகொண்டிருந்தனர்.
சற்று முன்னர் திருவுடல் உடுப்பிட்டியில் உள்ள அவருடைய பூர்வீக இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
நாளை அவருடைய புகழுடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்று எள்ளங்குளம் பகுதியில் உள்ள இந்து மயானத்துக்கு புகழுடல் எடுத்துச் செல்லப்பட ஏற்பாடாகியுள்ளது.