முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் முன்னாள் இராணுவத் தளபதிகள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் கூட்டுச் சேரும் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில்,
இலங்கை இராணுவத்தின் முன்னாள் பணிக்குழாம் பிரதானியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே இன்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து, ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட இவர் கட்சியின் ஊழல் எதிர்ப்பு கொள்கை மற்றும் அமுலாக்கல் பிரிவின் பிரதானியாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊழல் எதிர்ப்புப் பயணத்தின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அவர் இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதி மற்றும் மேற்கு பாதுகாப்பு படையின் தளபதி உட்பட பல முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்நாயக்கவும் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே போர்க் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.