சில நாட்களில் யாழ் – நாகை படகுச் சேவை தொடங்கும்! பணி நிறைவில் இந்தியத் துணைத்தூதர் தகவல்!

சில நாட்களில் யாழ் - நாகை படகுச் சேவை தொடங்கும்! பணி நிறைவில் இந்தியத் துணைத்தூதர் தகவல்!

editor 2

யாழ்ப்பாணம் – தமிழகம் (காங்கேசன்துறை – நாகபட்டினம்) படகு சேவை இன்னும் சில நாட்களில் மீளவும் ஆரம்பிக்கப்படும். இதே போன்று யாழ்ப்பாணம் – சென்னை இடையே விமான சேவையை மற்றொரு விமான சேவை நிறுவனமும் விரைவில் ஆரம்பிக்கும் – இது தொடர்பில் பேச்சுகள் நடக்கின்றன என்று யாழ்ப்பாணத்தில் தனது சேவையை நிறைவு செய்து செல்லும் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனது மூன்று ஆண்டுகள் சேவையை நிறைவு செய் துள்ள இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜூக்கு யாழ். நகரிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பிரிவுபசார விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

யாழ்ப்பாணத்தில் சேவையாற்ற வரும்போது பல திட்டங்களுடனே வந்தேன். அவ்வாறு எண்ணிவந்த பல வற்றை செய்ய முடியவில்லை. கோவிட் தொற்று பரவல் – பொருளாதார பாதிப்பால் பல விடயங்களை முன்னெடுக்க முடியவில்லை. எனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவைகளை முன்னெடுத்துள்ளோம்.

எனது காலத்தில், வாரத்தில் 04 முறை என்றிருந்த யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவையை 7 தடவையாக மாற்ற முடிந்தது. இந்தப் பணியில் என்னுடன் பல அதிகாரிகள் பங்காற்றினார்கள்.

எனக்கு முன்னர் இருந்த தூதுவர்கள் – இங்குள்ள முக்கியஸ்தர்கள் இந்த விடயத்தில் பங்குக்கு உரியவர்கள் அவர்களுக்கு எனது நன்றி. விரைவில் மற்றொரு தனியார் விமான சேவை நிறுவனமும் யாழ்ப் பாணம் – சென்னை விமான சேவை யில் இராமேஸ்வரம் – தலை மன்னார் படகு சேவையும் ஓரிரு ஆண்டு களுக்குள் தொடங்கி விடும். இது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் இருந்தும் கலைஞர்கள் தமிழ்நாடு செல்கிறார்கள். இது எமக்கு மகிழ்ச்சி தருகிறது. யாழ்ப்பா ணம் மத்திய கலாசாரநிலையத்திலுள்ள வசதிகள் போன்று இலங்கையில் வேறு எங்கும் இல்லை. இது கலைஞர்களுக்கானது – மக்களுக்கானது. இதனை யாழ்ப் பாணம் மாநகர சபையின் நிதியிலிருந்தே கவனித்துக்கொள்ளும் விதமாக சிந்தித்து வருகிறோம் – என்றும் அவர் கூறினார்.

Share This Article