சேவையில் ஈடுபடுத்த முடியாத 700 பேருந்துகளை இந்த வருடம் ஏலத்தில் விட இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
இந்த பேருந்துகள் அனைத்தும் பல வருடங்களாக இயங்க முடியாத நிலையிலிருப்பதாக அந்த சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.
கொழும்பு பிரதேசத்தில் இயங்க முடியாத நிலையில் 103 பேருந்துகள் உள்ளதாகவும், அந்த பேருந்துகளின் பதிவை இரத்து செய்யுமாறு அறிக்கையொன்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிப்போக்களில் இருக்கும் பேருந்துகளை இரும்புக்காக ஏலம் விடவுள்ள நிலையில் அதில் கிடைக்கும் பணத்தில் புதிய பஸ்களை கொள்வனவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை போக்குவரத்து சபையின் 5,300 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வருட இறுதிக்குள் பஸ்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.