இந்தியத் தூதுவர் 2 ஆவது மணல் திட்டில் வழிபாட்டில் ஈடுபட்டார்!

இந்தியத் தூதுவர் 2 ஆவது மணல் திட்டில் வழிபாட்டில் ஈடுபட்டார்!

editor 2

இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஸ் ஜா, இராமர் பாலம் எனப்படும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2ஆவது மணல் திட்டில் சமய வழிபாட்டில் ஈடுபட்டார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பகுதியில் ஆங்காங்கே
மணற்திட்டுக்கள் காணப்படுகின்றன.

ஐதீகக்கதையான இராமாயணத்தில், வானர சேனைகள் அமைத்த பாலம் பற்றிய கூற்று உள்ளது.

அந்த பாலத்தின் எச்சங்களென இந்த மணற்திட்டுக்களை கூறுவோரும் உள்ளனர்.

எனினும், அது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட விடயமல்ல.

இந்திய பெரு நிலப் பரப்பிலிருந்து இயற்கை காரணங்களால் இலங்கைத் தீவு பிரிந்த போது உருவான எச்சங்களாக அவை கருதப்படுகின்றன.

எனினும், இந்திய அரசியலில் மதம் தீவிர பங்காற்றும் நிலைமையில், இலங்கைக்கான இந்திய தூதர்கள் இந்த மணற் திட்டுக்களுக்கு சென்று பூசை வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த வகையில், இலங்கைக்கான புதிய இந்திய தூதர் சந்தோஸ் ஜாவும், இராமர் பாலத்தில் வழிபடுவதாக குறிப்பிட்டு, 02 ஆவது மணற்திட்டில் நேற்று வழிபாடு செய்தார்.

Share This Article