இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து
கவலை தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, ‘இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளை
விக்கும் எதையும் நாடு அனுமதிக்காது’ என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
நான் மீண்டும் வருவதற்கு நான் போட்டியிட வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெ
ழுப்புவதை முதல் கடமையாகக்கொண்டுள்ளேன். திவால்நிலையிலிருந்து மீள்வதில் கவனம்
செலுத்துவதே இலக்காகும்.
நான் மீண்டும் ஜனாதிபதவிக்காக போட்டியிட எதிர்பார்த்துள்ளேன்-என்றார்.