ஐ.நா பேரவையின் ஆலோசனைகளைப் பின்பற்றவேண்டிய அவசியமில்லை என்கிறது இலங்கை!

ஐ.நா பேரவையின் ஆலோசனைகளைப் பின்பற்றவேண்டிய அவசியமில்லை என்கிறது இலங்கை!

editor 2

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனைகளை பின்பற்றவேண்டிய அவசியமில்லை என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

‘நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டிய அவசியமில்லை.

அவர்களின் செயல்பாடுகள் மூலம் சாதகமான விளைவுகள் எதுவுமில்லை. அவர்களின் செயல்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை.

எங்களின் சிவில் சமூகத்தினர் சில சட்டங்களை மாற்றவேண்டும் எனத் தெரிவித்துள்ளதால் நாங்கள் எங்கள் சமூகத்தினருடன் கலந்துரையாடுவோம்.

சர்வதேச நிபுணர்களுடன் இல்லை. உள்நாட்டு சமூகத்துடன் பேச்சுகளை மேற்கொண்டு சில மாற்றங்களை மேற் கொள்ளப்போகின்றோம்- இவ்வாறு கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்
றுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Share This Article