சமூக ஊடகங்களில் அவதூறு – ஒருவர் கைது!

சமூக ஊடகங்களில் அவதூறு - ஒருவர் கைது!

editor 2

அமைச்சர்கள் உட்பட பல்வேறு நபர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்பி வரும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறானவர்களை வழிநடத்துபவர்கள் யார் என்பது எதிர்காலத்தில் தெரியவரும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதியொருவர் அந்த நபருக்கு டொலர்களில் பணத்தை வழங்கியதாக அவர் குறிப்பிட்ட அமைச்சர், பணம் கொடுத்து இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாணந்துறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Share This Article