2025 இல் மாகாணசபைத் தேர்தல்!

2025 இல் மாகாணசபைத் தேர்தல்!

editor 2

ஒருங்கிணைந்த அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களில் அநேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்கத் தயாராகவுள்ளோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் (2025) மாகாண சபைகள் தேர்தலை நடத்துவோம் என்று கூறிய அவர், பாராளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றியவேளை நான் தெரிவித்தது போல ஒவ்வொரு மாகாண சபைக்கும் அதன் சொந்த பொருளாதாரத்தை வழங்க விரும்புகின்றோம்.

இதனால், இந்தியா போன்று ஒவ்வொரு மாகாணமும் ஏனைய மாகாணத்தின் பொருளாதாரத்துடன் போட்டியிடும். இதனால் நன்மையேற்படும் பொருளாதாரம் போட்டிதன்மை மிகுந்ததாகக் காணப்படும். மேலும் இந்த மாகாணங்கள் தங்களின் பொருளாதார, சமூக அபிவிருத்தியை தேசிய கொள்கை கட்டமைப்புக்குள் கையாளவேண்டும்.

இந்த அடிப்படையில் ஒருங்கிணைந்த அதிகாரப் பட்டியலில் உள்ள அதிகாரங்களில் அநேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம்.

சில சிறுபான்மை குழுக்கள் செனட் சபைக்கான வேண்டுகோளை விடுத்துள்ளன. எங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் அதனை எதிர்க்கமாட்டோம்.

ஆனால், இதனை வெறுமனே அரசாங்கம் மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ளவேண்டும். பாராளுமன்றத்தில் பல கட்சிகள் உள்ளன – இவ்வாறு
இந்தியாவின் பிரபல ஊடகமான வியோன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

Share This Article