போதைப்பொருள் வியாபாரம் மற்றும் திட்டமிட்ட குற்ற நடவடிக்கைகளைக் கைப்பற்றும் நோக்கில் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் 547 பேரும், தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்த 116 பேரும் அடங்குவர்.
கைது செய்யப்பட்டவர்களில் 02 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சந்தேக நபர்களில் 14 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 95 பேருக்கு எதிராக போதைப்பொருள் அல்லாத குற்றங்களுக்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது 175 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 197 கிராம் ஐஸ் போதைபொருள் , 515 கிராம் 538 மில்லி கிராம் கஞ்சா , 807 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.