விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
குறித்த தகவலை வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு விபத்துக்களில் சிக்கிய நிலையில் ஆயிரத்து 559 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.