கொழும்பு மாவட்டம் மிரிஹானை ஜுபிலி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு வயோதிபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அயலவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்களை மீட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
80 வயதுடைய ஆண் ஒருவரும், 96 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வயோதிபர்கள் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது இயற்கை மரணமா? என்பது தொடர்பில் காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.