பொதுச் செயலாளர் பங்கீடு உண்மையே என்கிறார் சிறிநேசன்!

பொதுச் செயலாளர் பங்கீடு உண்மையே என்கிறார் சிறிநேசன்!

editor 2

தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்காலத்தை தலா ஒரு வருடம் பகிர்வதற்கு இணங்கியமை உண்மை என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டு. ஊடக அமையத்தில் செய்தியாளர் சந்திப்பை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஞா. சிறீநேசன் நடத்தினார்.

இதன்போது,

செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், மத்திய குழுக் கூட்டத்தின் போது பொதுச் செயலாளர் பதவியை முற்று முழுதாக ச.குகதாசனுக்கு விட்டுக் கொடுப்பதாக கட்சித் தலைவர் சி. சிறிதரனிடம் கூறவில்லை. தலா ஒரு வருடம் அதை பங்கிட்டுக் கொள்வது என்றே சொல்லப்பட்டது முழுமையாக பதவியை ஒப்படைப்பது என்று கூறவில்லை. பதவிக்காலத்தை பகிர்வதற்கு இணங்கியமை உண்மை – என்றார்.

Share This Article