5000 பாடசாலைகளில் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை!

5000 பாடசாலைகளில் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை!

editor 2

நாட்டில் 4 ஆயிரத்து 983 பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனை உள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவரிடையேயான போதைப் பொருள் பாவ னையை கட்டுப்படுத்த பாடசாலை நிர்வாகம் மற்றும் மாணவர்களின் பெற் றோர்களை உள்ளடக்கி 5 ஆயிரத்து 133 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலுக்கு அமையவே இந்தக் குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் 10 ஆயிரத்து 221 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலேயே 4 ஆயிரத்து 983 பாடசாலைகளில் மாணவர்கள் போதைப் பொருள் பாவனையில் 85 கிராம் ஹெரோயின், 48 கிராம் ஐஸ், ஆயிரத்து 561 போதை மாத்திரைகள், ஒரு கிலோவுக்கும் அதிகமான கஞ்சா, 3 கிலோ மாவா, 2 கிலோவுக்கும் அதிகமான மதன மோதக மாத்திரைகள், ஆயிரத்து 285 சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறான சோதனை நடவடிக்கை மூலம் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை குறைவடைந்துள்ளது.

எனினும், 107 பாடசாலைகளில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் போதைப்பொருள் பாவனை உள்ளதாக அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு பாடசாலை தொடர்பாகவும் அந்தந்த பாடசாலை ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரின் பங்களிப்புடன் 5 ஆயிரத்து 133 குழுக்கள் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மாணவர்களை தவறான வழியில் இட்டுச் செல்லும் வாய்ப்புகள் அதிகமுள்ளதாகக் கருதப்படும் 434 பாட சாலைகளில் பொலிஸார் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

Share This Article