கெஹலிய ரம்புக்வெல்லவின் கீழிருந்த சுற்றாடல் அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் எம்.எஸ்.பி ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
பிரதமர் தினேஸ் குணவர்தனவுடன் கலந்துரையாடப்பட்டதன் பின்னர், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுற்றாடல் அமைச்சராக செயற்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர் தமது அமைச்சுப் பதவியில் இருந்து நேற்றைய தினம் விலகினார்.
இதனால், அவர் வகித்த சுற்றாடல் அமைச்சுப் பதவி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.