நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்டாத சுமார் 50 வெதுப்பகங்கள் மீது சோதனை நடத்தப்பட்டு, அந்த வெதுப்பகங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று இந்த சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் மேற்படி சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளபட்டமை குறிப்பிடத்தக்கது.