புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துவதில்லை – அமைச்சரவைக்கு பத்திரம்!

Editor 1

புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றும் அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்த வேண்டுமா? என்பது குறித்து ஆராய மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

குறித்த மூன்று குழுக்களும் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டியதில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தன. இந்நிலையிலேயே இது குறித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்க ஏற்பாடாகியிருப்பதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article