உறவினர்களிடையே மோதல்! கந்தரோடையில் ஒருவர் கொலை!

உறவினர்களிடையே மோதல்! கந்தரோடையில் ஒருவர் கொலை!

editor 2

அயல் வீட்டுக்காரர்களான உறவினர்களிடையே ஏற்பட்ட மோதல் கத்திக் குத்தில் முடிந்த தில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சுன்னாகம் – கந்த ரோடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில், அதே இடத்தைச் சேர்ந்த சந்திர நாதன் கோபிராஜ் (வயது – 36) என்பவரே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

அயல் வீடுகளில் வசித்து வந்த உறவினர்களான இருவருக்கும் இடையே நேற்று மாலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, உயிரிழந்த நபர் மற்றையவரை கொட்டனால் தாக்கியுள்ளார். இதன்போது, மற்றைய நபர் அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்தியால் குத்திய நபரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share This Article