யாழ்ப்பாணம் – வலி. வடக்கில் இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் சுமார் 500 ஏக்கரை மீண்டும் சுவீகரிக்கும் முயற்சி நடக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
குரும்பசிட்டி, வயாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு பகுதிகளிலேயே குறித்த காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன. இதற்காக, இராணு வத்தினரும் பிரதேச செயலகத்தினரும் நேற்றைய தினம் அளவீட்டுப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று அறிய
வருகின்றது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்காகவே இந்தக் காணி சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் விமானப் போக்குவரத்து அதிகார சபை ஊடாக நில அளவைத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட வரைபடத்துக்கு அமைவாகவுமே இந்த சுவீகரிப்பு இடம் பெறவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
காணி சுவீகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதி கள் தெல்லிப்பழை பிரதேச செயலகத் துக்கு இன்றைய தினம் சென்று பேச்சு நடத்தத் தீர்மானித்துள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.
இதேவேளை, இராணுவத்தினரின் பிடியில் வலி. வடக்கில் இன்னமும் 3200 ஏக்கருக்கும் மேல் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் உள்ளன என்ப தும் குறிப்பிடத்தக்கது