கேகாலை மாவட்டம் மாவனல்லை நகரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 30 வர்த்தக நிலையங்கள் தீப்பரவலால் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பழங்கள் மற்றும் விளையாட்டு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன.
தீப்பரவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த மாவனல்லை நகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் பொதுமக்களும் இணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் மாவனெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.