முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மாத்தளன் கடலில் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.
முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்கச்சென்ற இளம் குடும்பஸ்தரான 33 வயதுடைய 10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமைமாலை இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
குடும்பமாக ஆண், பெண்கள் என சுமார் 15 பேர் வரையில் வாகனத்தில் சென்று குறித்த கடலில் குளித்துள்ளதை கரையில் உள்ள ஏனையவர்கள் அவதானித்துள்ளனர்.
இதன்போதே ஒருவர் கரையில் இருந்து சற்றுதொலைவில் சென்ற நிலையில் அவர் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.