விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் மன்னார் – வெள்ளாங்குளம் – கணேசபுரம் பகுதியை சேர்ந்த பழனி பரஞ்சோதி (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு
உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
குறித்த நபர் கடந்த 24ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை இரண்டு டிப்பர்கள் ஒன்றுடன் ஒன்று மோதின. இதன்போது இவர் டிப்பருக்கு பின்னால் மோதி விபத்தில் சிக்கினார்.
இந்நிலையில் அவர் மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மருத்துவமனைக்கும் பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் மரணம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.