யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இன்று முற்பகல் அரச பேருந்தும் தனியார் பேருந்தும் விபத்தில் சிக்கியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீதியில் பயணிகளை ஏற்றுவதற்காக சடுதியாக நிறுத்தப்பட்ட அரச பேருந்தின் பின்னால் அதி வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதாக தெரியவருகிறது.
சம்பவத்தை அடுத்து இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.