அரசாங்க துறைகளைச் சேர்ந்தவர்களின் வருடாந்த இடமாற்றங்களின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களிடம் இலங்கை அரசாங்க பொதுச் சேவை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எழுத்துமூலம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் தொடர்பில், ஆணைக்குழுவின் தீர்மானங்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரச சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.