தனுஷ்கோடியையும், மன்னாரையும் இணைக்கும் புதிய கடல் பாலம் தொடர்பில் இந்திய மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி இந்தியாவின் – தனுஸ்கோடியை இலங்கையுடன் இணைக்கும் கடல் பாலம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவுபடுத்த உள்ளதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்தநிலையில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை பாலம் அமைக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கமைய சுமார் 23 கிலோமீற்றர் நீளமுள்ள பாலத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறு தொடர்பில், இந்திய மத்திய அரசு விரைவில் ஆராய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூலை மாதம் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லி சென்றிருந்த போது, குறித்த திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளையும் இணைக்கும் வகையிலான பாலத்தை அமைக்க முடியுமா என்பதைப் பற்றி அரசு தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்
இரண்டு நாடுகளைக் கடல் பாலம் மூலம் இணைக்க வேண்டும் என்பது குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.