முன்னைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைய முன்வருமாறு கட்சிகளுக்கு சிறிதரன் அழைப்பு!

முன்னைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைய முன்வருமாறு கட்சிகளுக்கு சிறிதரன் அழைப்பு!

editor 2

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு இருந்ததோ அவ்வாறான நிலையை தமிழ் மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதிகள் என்ற நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எய்த வேண்டும். எனவே, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ்க் கட்சிகளும் தம் கட்சிகளின் நலனை முன்னிறுத்தாமல் – மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தின் பாதையில் ஓரணியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன் – இவ்வாறு இலங்கை தமிழரசு கட்சி யின் புதிய தலைவரான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் தலைவராக வெற்றி பெற்ற பின்னர் விடுத்துள்ள அழைப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்தவை,

‘தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்பதே எனது பெருவிருப்பம். அதனை முன்னிறுத்தியே தமிழரசு கட்சியின் தலைமைப்பதவிக்கான போட்டியில் நின்று, இப்போது தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளேன்.

இந்தநிலையில் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் புத்துயிரூட்டுவதே என் முன்னுள்ள முதல் பணியென எண்ணுகிறேன்.

தமிழ் மக்களின் உரிமைக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக குரல் கொடுத்த, மக்களுக்காக அரசியல் பணி செய்த சக தமிழ்த் தேசியக் கட்சிகள் சில பல காரணங்களால் பிரிந்து தனிவழியே பயணிக்கின்றன.

இது எமது பொது எதிரிக்கே சாதகமானது. அதன் விளைவை கடந்த தேர்தல்கள் எமக்கு உணர்த்தியிருந்தன. 2009இற்க்கு முன்னர் கூட்டமைப்பு எப்படி தமிழ் மக்களின் அசைக்கமுடியாத சக்தியாக மிளிர்ந்ததோ, அதே நிலையை மீண்டும் எட்டவேண்டும் என்பதே தமிழ்மக்களின் பெருவிருப்பம். எனது விருப்பமும் அதுவே. இப்போது அதற்கான காலம் கனிந்துள்ளது. இதற்காக அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சி களையும் கடந்தகால கசப்பான நினைவுகளைக் களைந்து ஒன்றிணையுமாறு அன்புடன் அழைக்கின்றேன் – என்று கூறினார

Share This Article