பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தமிழரசுக்கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திருகோணமலையில் இன்று முற்பகல் நடைபெற்றது.
அதன் அடிப்படையில்,
சிவஞானம் சிறிதரன் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், எஸ்.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமைப் பதவிக்காகப் போட்டியிட்டிருந்தனர்.
இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில்.
சிவஞானம் சிறிதரன் 184 வாக்குகளையும், எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபஸ்பரம் கடுமையான அவதூறுப் பரப்பல்களுக்கு மத்தியில் குறித்த தேர்தல் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.