ரணில் வெற்றிக்காக ஒதுங்குகிறது பொதுஜன பெரமுன?

ரணில் வெற்றிக்காக ஒதுங்குகிறது பொதுஜன பெரமுன?

editor 2

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை  நிறுத்துவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது என்று தென்னிலங்கையின் பிரபல பத்திரிகையான சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் வாக்கு வங்கியை அதிகரிப்பதே இதன் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த விடயங்களிற்கு அப்பால் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச புதிய நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.நாங்கள் இன்னமும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்  குறித்து தீர்மானிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 14ம் திகதி நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது வேட்பாளரை நிறுத்தவேண்டுமா என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் முக்கியமாக தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தில் மிக முக்கியமான விடயங்களை மகிந்த ராஜபக்ச முன்வைத்துள்ளார்.

முதலாவதாக தம்மிக பெரேரா உட்பட நான்கு வேட்பாளர்கள் குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது செல்லுபடியற்றவையாகிவிட்டன என்பதை மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்னமும் தெளிவாக தெரிவிப்பதென்றால் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் மாற்றத்திற்குள்ளாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசத்தின் நிலைப்பாட்டிற்கு மாறாக மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார் என தெரிவிப்பது பிழையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article