தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரே சிறைகளில் உள்ளனர் – நீதியமைச்சர்!

சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

editor 2

வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு விசேட பூஜை வழிபாடு களில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் – அரசியல் கைதிகள் விடயத்தில் அரசியல் கைதிகள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 இன்னும் அரசியல் கைதிகள் 14 பேரே உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Article