கோத்தபாய துமிந்த சில்வாவிற்கு வழங்கிய பொது மன்னிப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

editor 2

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 17) ரத்து செய்துள்ளது.

துமிந்த சில்வாவுக்கு எதிரான தண்டனை மற்றும் தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துமிந்த சில்வாவின் ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குகளின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவியும் மகளுமான சுமணா மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கஸாலி ஹுசைன் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், துமிந்த சில்வாவிற்கு 2016 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றம் சில்வாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு சில்வாவை விடுதலை செய்ய சிபாரிசு செய்ததையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஜூன் மாதம் விசேட ஜனாதிபதி மன்னிப்பை வழங்கியிருந்தார்.

எவ்வாறாயினும், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) அந்த மாத இறுதியில் கைது செய்யப்பட்டார்.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பை உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தியதை அடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் துமிந்த சில்வா கைது செய்யப்பட்டார்

Share This Article